இன்று நடந்த ஆட்டத்தில் நடுவரால் கணிக்கமுடியாத தீர்ப்பு!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிதொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 4 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலுக்கு பந்து வீசிய குருணால் பாண்ட்யா, நடுவரிடம் எல்.பி.டபிள்யூ அவுட் கோரினார்.

அதற்கு நடுவர் உடனே அவுட் என்று அறிவித்தார். ஆனால், மிட்செல் இது குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனிடம் ஆலோசித்து விட்டு பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டது என ரிவியூ கேட்டார்.

அதனைத் தொடர்ந்து ரிவியூ பார்க்கப்பட்டபோது ஹாட்ஸ்பாட்டில், மட்டையின் உள்விளிம்பில் பந்து பட்டதற்கான மிகப்பெரிய வெள்ளைப் புள்ளி தெரிந்தது. ஆனால், ஸ்னிக்கோ மீட்டரில் பந்து மட்டையைக் கடக்கும்போது எதுவும் தெரியவில்லை. இதனையடுத்து 3வது நடுவர் அவுட் என்று கூறினார். இது மிட்செலுக்கும், வில்லியம்சனுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.