சிலிண்டர் வெடித்து விளைந்த விபரீதம்!!

மரக்காணத்தில் உள்ள சிட்லப்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி செண்பகவள்ளி. இவர் கடந்த 1-ம் தேதி மாலை கியாஸில் சமையல் செய்தார்.

அப்போது கியாஸில் கசிவு ஏற்பட்டு தீ பிடிக்க தொடங்கியது. இதனால் செண்பகவள்ளி வெளியே ஓடிவந்தார். அப்போது சிலிண்டர் வெடித்து வீட்டில் தீ பரவியது. அப்போது காற்று வீசியதால் அப்போது அருகில் உள்ள கமலக்கண்ணன் வீட்டிலும் தீ பரவியது.

அருகில் வசித்து வந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து வேடிக்கை பார்க்கையில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இத்தகவல் அறிந்து தீ அணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இதனால் தீக்காயம் அடைந்த செண்பகவள்ளி, கமலக்கண்ணன், ஜெயலட்சுமி உள்பட 8 பேரை 108 ஆம்புலன்ஸ்சில் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் சிகிச்சையின் பலனின்றி ஜெயலட்சுமி, கமலக்கண்ணன் இறந்தனர். இச்சம்பவம் குறித்து பிரம்மதேசம் சப்-இன்ஸ்பெக்டர் பாபு விசாரணை நடத்தி வருகிறார்.