டி20 தொடரில் 10 ரன்களை மட்டுமே எடுத்த ஆஸ்திரேலிய அணி!

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான டி20 தொடரில் வெறும் 10 ரன்களை எடுத்து தெற்கு ஆஸ்திரேலியன் அணி அணைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. பெண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற போட்டியில் தெற்கு ஆஸ்திரேலியன்- நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த தெற்கு ஆஸ்திரேலியன் அணியில் அடுத்தடுத்து வீராங்கனைகள் ஆட்டமிழக்க வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்தனர், இதில் 6 ரன்கள் அகலப்பந்து போட்டு பெறப்பட்டது. மீதம் 4 ரன்கள் மட்டுமே அடித்து எடுத்துள்ளனர்.

தொடக்க வீராங்கனை பெபி மான்செல் மட்டும் 4 ரன்கள் எடுத்தார், ரோக்சனா 2 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் 2.5 ஓவரில் 11 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.