15 வருடங்களுக்கு பிறகு இமாலய தொடர் வெற்றி!

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 5 ஆவது மற்றும் இறுதிப் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார்.

ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மாஉட்பட முன்னணி வீரர்கள் அதிர்ச்சி கொடுக்க விஜய் சங்கரும் அம்பத்தி ராயுடுவும் தூக்கி நிறுத்தினர்கள். விஜய் சங்கர் 45 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். 90 ரன்கள் எடுத்திருந்த போது ராயுடு ஆட்டமிழந்தார். கேதார் ஜாதாவும் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஹர்டிக் பாண்டியா 22 பந்துகளில் 45 ரன்களை இறுதி நேரத்தில் அதிரடியாக குவித்ததால் இந்திய அணி 250 ரன்கள் என்ற இலக்கை கடந்தது. 49.5 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.

253 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு முஹமது ஷமி அதிர்ச்சி கொடுத்தார். அவருடைய வேகப்பந்துவீச்சில்காலின் முன்றொ 24 ரன்களிலும், நிக்கோலஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த ரோஸ் டெய்லர் நடுவரின் தவறான தீர்ப்பால் பாண்டியா பந்தில் வீழ்ந்தார்.

அதன்பிறகு வில்லியம்சன் லதாம் ஜோடி நிலைத்து நின்று சிறப்பாக விளையாடிய வந்த நிலையில், அந்த ஜோடியை கேதார் ஜதாவ் பிரித்தார். 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வில்லியம்சன் ஆட்டமிழக்க, லதாம் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஜிம்மி நீஷம் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உட்பட 44 ரன்களை விளாசி தள்ள தோனியின் மாஸ்டர் மைண்ட் அட்டாக்கில் ரன் அவுட் ஆனார்.

இறுதியில் சான்டனர், ஹென்றி சில சிக்ஸர் பவுண்டரிகளை விளாசி நியூசிலாந்தின் ரசிகர்களை குஷி படுத்தினார்கள். நியூசிலாந்து அணி 44.1 ஓவர்களில் 217 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்த தொடரை இந்திய அணி 4 க்கு 1 என்ற கணக்கில் வென்றது. ஆட்டநாயகனாக அம்படி ராயுடு தேர்வு செய்யப்பட்டார்.

இது நியூசிலாந்தில் 15 வருடங்களுக்கு பிறகு அந்த அணிக்கு எதிராக பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சொந்த நாட்டில் 5 போட்டிகளை நியூசிலாந்து தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் நாயகனாக 9 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் முஹம்மது ஷமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆல் ரவுண்டர் அல்லாத தொடர் நாயகன் விருது பெரும் மூன்றாவது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையினை முகம்மது ஷமி புவனேஷ்வர் குமார், பும்ராவிற்கு பிறகு பெறுகிறார்.