முக்கிய நபர்களிடம் இருந்து பெற்றோருக்குரிய அறிவுரைகளை பெரும் ஹரி – மேகன் தம்பதி!

பிரித்தானிய இளவரசர் ஹரி – மேகன் தம்பதி, தங்கள் வாழ்க்கையில் இரண்டு முக்கிய நபர்களிடமிருந்து பெற்றோருக்குரிய ஆலோசனைகளை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹரியின் மனைவி மேகன் தற்போது கர்ப்பிணியாக இருந்து வருகிறார். தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பதியினருக்கு இரண்டு முக்கிய நபர்கள் ஒரு பல அறிவுரைகளை வழங்கி வருவதாக செய்தி வெளியாகியிருந்தது.

தற்போது அந்த நபர்கள் இரண்டு பேர், வில்லியம்- கேட் தம்பதி என்பது தெரியவந்துள்ளது.

ஹரி தன்னுடைய மனைவியுடன் அரண்மனையிலிருந்து வெளியேறுவதற்கு வில்லியம் – கேட் தம்பதி தான் காரணம் என பல வதந்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் இந்த செய்தியானது அவை அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குழந்தையை பேணிக்காப்பதற்கான அனைத்து குறிப்புகளையும் மேகனுக்கு, இளவரசி கேட் வழங்கி வருகிறாராம்.

இன்று காமன்வெல்த் பல்கலைக் கழக சங்கத்திற்கு, அனைவரையும் கவரும் வகையில் கருப்பு நிறத்திலான ஆடையினை அணிந்து வருவதற்கு கூட கேட் கொடுத்த குறிப்புகள் தான் காரணம் என தெரியவந்துள்ளது.