இரண்டு வயது குழந்தையை விஷ ஊசி போட்டு கொலை செய்த கொடூரம்.!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளியை அடுத்துள்ள வெள்ளநாயக்கனேரி அகரத்தான்வட்டத்தை சார்ந்தவர் சந்தியா (21)., இவர் திருப்பத்தூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும்., தகரகுப்பதை அடுத்துள்ள தொட்டியகிணற்றை சார்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு வயதுடைய ரோஷன் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக இருந்த வந்த குடும்பத்தகராறின் காரணமாக ஓராண்டாக தனது தாயாரின் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில்., சரவணன் வெளிநாட்டிற்கு பணிக்கு சென்றுவிட்டனர்.

தனது தாயாரின் இல்லத்தில் இருந்த நிலையில்., அவரது வீட்டின் கட்டிலில் இருந்த ரோஷன் தலையணை வைத்து கொலை செய்யப்பட்ட நிலையில்., வாயில் நுரை தள்ளி இறந்ததை கண்டு., அதிர்ச்சியடைந்த உறவினர் கதறவே., குழந்தையை கண்ட சந்தியா கதறியழுதார்.

மேலும்., உறங்கிக்கொண்டு இருந்த குழந்தையின் மீது தலையணை விழுந்து மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்று கூறிவந்த நிலையில்., குழந்தையை கொலை செய்திருக்கலாம் என்ற பேச்சும் வெளிவர துவங்கியது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது., சந்தியாவிற்கும் – அதே பகுதியை சார்ந்த வாலிபர் ஒருவருக்கும் ஏற்பட்ட பழக்கமானது கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது.

இவர்களின் உல்லாச தொடர்பிற்கும்., கள்ள காதலுக்கும் குழந்தை இடையூறாக இருந்த காரணத்தால் தாமே தலையணையை வைத்து அமுக்கி குழந்தையை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். இதனை அறிந்த காவல் துறையினர்., உடனடியாக அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்., இந்த சம்பவத்தில் குழந்தைக்கு சந்தியா விஷ ஊசி ஏதேனும் போட்டு கொலை செய்தாரா? அல்லது இந்த கொலையில் சந்தியாவின் கள்ளகாதலனுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.