அன்டார்டிகாவாக மாறிய அமெரிக்காவின் சிகாகோ.! வெளியான அதிர்ச்சி காணொளி.!!

அமெரிக்கா நாட்டில் இந்த காலமானது குளிர் காலம் என்பதன் காரணமாக அங்கு கடுமையான அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் வாகனங்களை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அங்கு வீசிவரும் கடுமையான பனிபொழிவின் காரணமாக மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளில் வீசிய கடுமையான பனிபொழிவின் காரணமாக அவ்வப்போது விமானங்கள் இரத்து செய்யப்பட்டு இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அங்குள்ள சமவெளி பகுதிகளில் பெய்த பனிப்பொழிவு மற்றும் கடுமையான காட்டின் மூலமாக சாலை போக்குவரத்தானது துண்டிக்கப்பட்டு மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டனர். மேலும் சுமார் 2 பேர் குளிரினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்., அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் உள்ள பெய்த கடுமையான அளவு பனி பொழிவின் காரணமாக அங்குள்ள நீர் நிலைகள் அனைத்தும் உறைந்துள்ள நிலையில்., அண்டார்டிக்கா பிரேதேசத்தை மிஞ்சும் வகையில் நீர் நிலைகள் அனைத்தும் உறைந்து காணப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே சுமார் மைனஸ் 20 டிகிரிக்கும் குறைவான அளவு வெப்பமானது நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள வடக்கு பகுதிகளான ப்லைன்ஸ்., கிரேட் லேக் பகுதிகளில் சுமார் மைனஸ் 30 டிகிரி முதல் 60 டிகிரி வரை பனிபொழிவானது பெய்து வருகிறது.

இதன் காரணமாக அங்குள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு., சுமார் 3480 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் அங்குள்ள பகுதிகளில் வாகனங்களை இயக்குவது கடினம் என்றும்., வாகனங்களை இயக்குபவர்கள் கவனமாக இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அதிகளவில் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று., இந்நிலையில்., அங்கு குளிரால் அவர்கள் கடுமையான அவதியுற்று வந்தாலும்., அதற்கான பல முன்னேற்பாடுகளை செய்திருந்தாலும்., இங்கு உள்ள சூழ்நிலைக்கு பழகிய அவர்கள் அங்குள்ள சூழ்நிலைக்கு பழகும் வரை சில குளிர் நோய்களால் அவதியுற வேண்டியிருக்கும்.