மூன்றாண்டுகளில் மூன்று திருமணம் செய்த பலே இளைஞன்! 3 பெண்களை ஏமாற்றி வாழ்ந்தது எப்படி?

சீனாவில் மூன்று ஆண்டுகளில் மூன்று பெண்களை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நபரை பொலிசார் கைது செய்தனர்.

சீனாவின் Henan மாகாணத்தைச் சேர்ந்தவர் Zhang. 36 வயதான இவர் நிலத்தரகராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டு வரை என மூன்று ஆண்களில் மூன்று பெண்களை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

அந்த மூன்று பெண்களையுமே 1 கிலோ மீற்றர் தூரத்திற்குள்ளையே வைத்து சமாளித்து வாழ்ந்து வந்துள்ளார். அவரின் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் பெற்றோர்களும் சேர்ந்து தான் இந்த திருமணங்களை செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நபரைப் பற்றி முதல் மற்றும் இரண்டாவது மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததால், அந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Zhang முதலில் தான் வேலை பார்க்கும் இடத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு Kunshan பகுதியைச் சேர்ந்த Ren என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

அதன் பின் தன்னுடைய சொந்த ஊரான Henan மாகாணத்தைச் சேர்ந்த Chen என்ற பெண்ணை 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். 2017-ஆம் ஆண்டு Anhui மாகாணத்தைச் சேர்ந்த Wang என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

Zhang நிலத்தரகர் என்பதால் அப்போது ஏற்பட்ட சந்திப்பின் போது இரண்டாவது மற்று மூன்றாவது மனைவியை திருமணம் செய்துள்ளார்.

மாதத்திற்கு பத்தாயிரம் யுவன் சம்பாதித்தால், மூன்று குடுமத்தினருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் சமாளித்து வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி மனைவிகளை வெகு தூரம் வைத்துவிட்டால் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக, மூன்று மனைவிகளையும், ஒரு கிலோ மீற்றர் சுற்றளவிற்குள்ளேயே குடி அமர்த்தியுள்ளார்.

ஒரு பெண்ணிடம் தான் வேலை விவகாரமாக வெளியில் செல்வதாக கூறிவிட்டு ஒவ்வொரு பெண்ணிடமும் இப்படி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதில் மூன்று பெண்களுக்கும் குழந்தை இருக்கிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு Zhang போனிற்கு வேறொரு பெண்ணிடம் இருந்து குறுந்தகவல் மொபைல் போனுக்கு வந்துள்ளது.

இதை அவரது இரண்டாவது மனைவி Chen பார்த்துள்ளார். இதனால் கணவன் மீது சந்தகே மடைய, கணவனை நோட்டமிட்டுள்ளார்.

அப்போது தான் Zhang வேலை தொடர்பாக வெளியில் செல்வதாக கூறிச் சென்ற போது, பின் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது அவர் தன்னுடைய மூன்றாவது மனைவியின் வீட்டிற்குள் நுழைவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு முதல் மனைவி இருக்கும் தகவலும் தெரியவர, இரண்டாவது மற்றும் மூன்றாவது மனைவி இருவரும் சேர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின்னரே பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். ஒருவரை திருமணம் செய்தால் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும், அப்படி இருக்கையில் இவர் எப்படி மூன்று திருமணம் செய்தார்? என்ற சந்தேகமும் பொலிசாருக்கு எழுந்துள்ளதால், பொலிசார் இது குறித்து முழு விசாரணைக்கு பின்னரே தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.