பிணவறையில் இருந்து உயிருடன் எழுந்த பெண்!

ரஷ்யாவில் இறந்துவிட்டதாக பிணவறையில் வைக்கப்பட்ட பெண் திடீரென எழுந்த நிலையில் பின்னர் மீண்டும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Amur பகுதியில் உள்ள 62 வயதான பெண் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த பொலிசார் அப்பெண் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.

பின்னர் இறப்பு சான்றிதழை கொடுத்த நிலையில் அப்பெண்ணின் சடலம் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிணவறையில் இருந்த ஊழியர்கள் பிணத்துக்கான எண்ணை எழுதி மேலே வைத்த போது அப்பெண்ணின் உடலில் அசைவு இருப்பதை கண்டனர்.

பின்னர் எழுந்த அப்பெண் அப்படியே படுத்து கொண்டார்.

இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சையளிக்கப்பட்டும் அப்பெண் உயிரிழந்தார்.

இது குறித்து மருத்துவர் Mikhail Danilov கூறுகையில், உயிரிழந்த பெண்ணுக்கு உச்சக்கட்ட ஜலதோஷம் இருந்தது. இதனால் hypothermia எனப்படும் உடலில் ஏற்பட்ட தாழ்வெப்பநிலை பிரச்சனையால் அவர் உயிரிழந்தார்.

பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டதற்கு பதிலாக முதலிலேயே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் அவர் உயிரை காப்பாற்றியிருக்கலாம் என கூறியுள்ளார்.

சுகாதார அதிகாரிகள் கூறுகையில், பொலிசாரே அப்பெண் இறந்ததாக முதலில் சான்றிதழ் கொடுத்தது தவறாகும்.

அவர்கள் ஆம்புலன்ஸை அழைத்திருக்க வேண்டும், இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.