தூக்கத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்: கண்ணீருடன் விவரித்த தாய்!

ஸ்காட்லாந்தில் தூக்கத்திலேயே கர்ப்பிணி பெண் உயிரிழந்த நிலையில் அவர் இறப்புக்கான காரணம் குறித்து தெரியாமல் தாய் இன்னும் தவித்து வருகிறார்.

ஸ்காட்லாந்தின் Glasgow நகரை சேர்ந்தவர் ரொசானா. அழகிய இளம் பெண்ணான இவர் கடந்த செப்டம்பர் மாதத்தில் 14 வாரங்கள் கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் அந்த மாதத்தின் இறுதியில் வீட்டின் படுக்கையில் தூங்கி கொண்டிருந்த போதே ரொசானாவின் உயிர் பிரிந்தது.

இதன் காரணமாக ரொசானாவின் தாய் ஜாக்குலின் மற்றும் கணவர் ஓலிவர் துடித்து போனார்கள்.

ரொசானாவின் பிரேத பரிசோதனையில் அவர் எப்படி இறந்தார் என்ற பதிலே இல்லை.

இதனால் இறுதி வரை தன் அழகிய மகளின் மரணத்துக்கு காரணம் தெரியாமலேயே போய்விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்துள்ளார் ஜாக்குலின்.

அவர் கூறுகையில், எங்கள் வீட்டு இளவரசியாக ரொசானா இருந்தாள். தூக்கத்தில் இருந்து எழாமலேயே அவர் உலகை விட்டு போனதை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

ரொசானா இறந்த அன்று காலையில் கூட என்னிடம் போனில் பேசினாள், அப்போது தனக்கு உடல்நிலையில் பிரச்சனை இருப்பதாக அவள் கூறவேயில்லை.

ஆனால் சில காலமாக அவள் காலில் புண் இருந்தது. மேலும் முழங்கையில் இருந்து அக்குள் வரை உணர்ச்சியற்று கிடப்பது போல உணர்வதாக இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் கூறினார்.

ஆனால் ரொசானாவின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

தற்போது என் மகளின் நினைவாக, துயரத்தில் இருக்கும் குடும்பங்கள் நிம்மதியாக ஓய்வெடுத்து தங்குவதற்காக வீடு ஒன்றை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

இதற்காக நிதி வசூல் செய்து வருகிறோம் என கூறியுள்ளார்.