தனியாக இருக்கும் பெண்களுக்கு குறி.. 4 ஆண்டுகளாக நடந்த கொலைகள்!

தனியாக இருக்கும் பெண்ளை குறி வைத்து தொடர் கொலைகள் அரங்கேறியிருப்பது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் சித்தமருத்துவராக பணியாற்றி வரும் தமிழ்செல்வி நீண்டநேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால், அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர்.

அங்கு கழுத்து அறுபட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார், தமிழ்ச்செல்வி. அதை பார்ர்த்து திடுக்கிட்ட அவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்த விசாரணையில், தனியாக இருக்கும் பெண்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கும் ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஆறுமுகம் அளித்துள்ள வாக்குமூலத்தில், கடந்த 4 ஆண்டுகளாக தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து, அவர்களை கொலை செய்துவிட்டு நகைகளை திருடி செல்வேன்.

ஆட்கள் குறைவாக இருக்கும் சித்தா மருத்துவமனையில் தமிழ்ச்செல்வி தனியாக இருப்பதை பயன்படுத்தி அவரது நகைகளை திருட முயற்சி செய்தேன்.

வயர் மூலம் தமிழ்ச்செல்வி கழுத்தை நெரித்து கொலை செய்தேன், அவர் மயங்கியபோது அவர் இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து தப்பித்து சென்றேன்.

இதற்கு முன்பு முத்தியால் பேட்டையை சேர்ந்த கலைவாணி, கிருஷ்ண‌வேணி ஆகியோரையும் கொலை செய்து, அவர்களது நகைகளை திருடி சென்றதை ஆறுமுகம் ஒப்புக்கொண்டுள்ளார்.