கொடநாடு கொலை விவகாரத்தில் தொடர்புடையவர்களை, எடப்பாடியிடம் ஒப்படைக்க தனியார் வாகனத்தில் கடத்திச் சென்றார்களா…? அடுத்த அதிரடி….!

கொடநாடு கொலை வழக்கு விவகாரத்தில் தொடர்புடைய சயன் மற்றும் மனோஜை டெல்லியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, பத்து நிமிடங்கள் கழித்து, மேத்யூஸ் சாமுவேல், சமூக வலையத் தளத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டார்.

அதில் அவர் கூறியதாவது –

“சயன் மற்றும் மனோஜ் ஆகியோருடன் பேசி விட்டு, நான் அங்கிருந்து கிளம்பினேன். அப்போது அந்த இடத்திற்கு தனியார் வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தில், போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது.

அந்த வாகனத்தில் வந்தவர்கள், சயன், மனோஜை கட்டாயப்படுத்தி கடத்திச் சென்றனர். அவர்களை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைப்பதற்காகவே கடத்திச் செல்கின்றனர், என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்.

இது போன்ற புலன் விசாரணையை நான் கூறுவதால், நான் அரசியல் சார்ந்து செயல்படுகிறேன், என்று பலர் சித்திரிக்கின்றனர். ஆனால், அது உண்மை இல்லை.

உதாரணமாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்பான வழக்கில், நான் ஒரு விசாரணை ஆதாரத்தை வெளியிட்டேன். அப்போது, என்னை, பா.ஜ.க.-வின் கைக்கூலி என்று விமர்சனம் செய்தார்கள். அதன் பின், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

அது போல, கொடநாடு கொலை வழக்கில், நான் சொன்ன குற்றச்சாட்டில் உண்மை வெளி வரும்” என்றார்.