இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? – பசில்!

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவராகவே இருப்பாரென அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்தோடு 2019ஆம் ஆண்டு முடிவுக்குள் தமது கட்சியிலிருந்து குறித்த ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவாரென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் ஏனைய கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி போன்றவற்றைவிட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அதிக பலத்தை நிருபித்திருப்பதாக தெரிவித்த பசில் ராஜபக்ஷ, இனிவரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் அதனைவிடப் பெரிய வெற்றியை பதிவு செய்யுமென்றும்  நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது தமது இலக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ, அமைச்சர் சஜித் பிரமேதாசாவோ அல்ல என்றும், ஒட்டுமொத்த சூழ்ச்சிக்காரர்களுமே தமது இலக்கு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.