நிர்மலா தேவியின் பேட்டியால் பரபரப்பு.!! அவர்கள் வராதது எனக்கு கடும் மனவேதனையாக இருக்கிறது”.!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயற்சித்ததன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்துகொண்டு இருக்கிறது.

இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கல்லூரியின் பேராசிரியர்கள் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு., இந்த பிரச்சனை தொடர்பான வழக்கானது திரு(ஸ்ரீ)வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த பிரச்சனை குறித்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்த நிலையில்., குற்றம் சாட்டப்பட்ட முவரும் பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு சமர்பிக்கப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் வரும் 30 ம் தேதியன்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். நீதிமன்றத்தில் விசாரணை நிறைவு பெற்ற பின்னர் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் பேட்டியில் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.

அதில் கேள்வியாக உறவினர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்த நிலையில்., யாரேனும் வந்து சந்தித்தார்களா? என்று கேட்கப்பட்டது., அதற்கு அவர் “சிறையில் வந்து என்னை எந்த உறவினரும் சந்திக்கவில்லை., அவர்கள் வராதது எனக்கு வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்தார்.