சிறுமி கேட்ட ஒரு கேள்வி, வாலிபர் செய்த கொடூர செயல்!

உத்தரப்பிரதேச மாநிலம் சாம்பால் மாவட்டத்தில் வசித்து வருபவர் அஜய் பால் மெளரியா. இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் மெளரியாவும் அவரது மனைவியும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு சற்று தொலைவில் மெளரியாவின் மகளும், மகனும் சற்று தவிளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் வீட்டு பகுதியாக ரோட்டில் வித்யா ராம் என்ற வாலிபர் கோபமான முகத்துடன் துப்பாக்கியோடு சுற்றித் திரிந்துள்ளார். அவரை பார்த்த சிறுமி, வாலிபரிடம் அந்த துப்பாக்கி உண்மையானதா, பொம்மை துப்பாக்கியா என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபர், சிறுமியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு , இது உண்மை துப்பாக்கிதான் என கூறிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இந்நிலையில் மகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த தந்தை மெளரியா, சுடப்பட்டு மகள் துடிதுடிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவர்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுகுறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கியால் சுட்ட அந்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.