இலங்கையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

திக்வெல்ல – கொட்டகொட பிரதேசத்தில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

26 வயதுடைய சுதுவெல்ல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.