இந்து பக்தர்களுக்கு ஓர் முக்கிய தகவல்…!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நாவற்குழி திருவாசக அரண்மனையில் நாளை மறுதினம் சனிக்கிழமை(12)திருவாசக முற்றோதல் நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் காலை-07 மணி முதல் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உப தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் சிறப்புரை ஆற்றுவார்.திருவாசக முற்றோதலுக்கான அனுசரணையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவரும், தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினருமான கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் வழங்கியுள்ளார்.

இதேவேளை, மேற்படி திருவாசக முற்றோதல் நிகழ்வில் திருவாசக ஆர்வலர்களைப் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.