அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்!

வாணியம்பாடியில் பள்ளிக்குச் சென்ற அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயமான நிலையில், நகர காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தாசிம், சைதானிபீ, ஸரிணா தஸ்ஸிம் ஆகிய மூன்று மாணவிகள்  எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில், நேற்று காலை தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்ற மாணவிகள் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம்பக்கம் உள்ள உறவினர் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்கததால் பள்ளிக்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால் மாணவிகள் 3 பேரும் இன்று பள்ளிக்கு  வரவில்லை என பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

இதனால் மேலும் அச்சமடைந்த பெற்றோர்கள் மாணவிகளை தேடியும் கிடைக்காத நிலையில், நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டு பள்ளி மாணவ மாணவிகளை பல இடங்களில் தேடி வந்த நிலையில், மாணவிகள் 3 பேரும் சென்னையில் இருப்பதாக போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் விசாரணையில் தெரிய வந்துள்ளது வாணியம்பாடி பகுதியில் பள்ளிக்குச் சென்ற எட்டாம் வகுப்பு பள்ளி மாணவிகள் மூன்று பேர் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.