96 வயது முதியவரால் காப்பாற்றப்பட்ட கிராமம்!

தைவானில் 96 வயதுடைய முதியவர் ஒருவர் தனது சுவர் ஓவிய கலையால் ஒரு கிராமத்தை காப்பாற்றி உள்ளார்.

தைவானில் வானவில் தாத்தா எனப்படும் ஹுவாங் ஒரு கிராமத்தை காப்பாற்ற புது முயற்சியை கையாண்டு உள்ளார்.

அதன்படி தனது சொந்த செலவில் பொருட்கள் வாங்கி அந்த கிராமத்தில் இருக்கும் வீடுகளில் சுவர் ஓவியம் செய்துள்ளார். இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இது குறித்து ஹுவாங், நான் எனது சிறுவதிலிருந்து ஓவியங்கள் வரைகிறேன். 7 வடங்களுக்கு முன் இந்த பணியை நான் ஆரம்பித்தேன்.

மேலும் இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருந்தன நான் ஓவியம் வரைந்ததால் இந்தகிராமம் இன்று அழிக்கப்படாமல் உள்ளது. தற்போது அரசு இந்த கிராமத்தை காப்பாற்றுவதாக ஒப்பு கொண்டுள்ளது.

இங்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே இந்த கிராமமே பாதுகாக்கப்பட்டுள்ளது என்கிறார் வானவில் தாத்தா.