முதலமைச்சரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய 3 அமைச்சர்கள்!

அசாமில் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையில் பா.ஜனதா கூட்டணி அமைத்து, ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் கணபரிஷத் கட்சி பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது.

இந்த சட்ட திருத்தத்தின் படி இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின் சமூகத்தினர், பார்ஸீஸ் இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர், 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு இந்தியக்குடியுரிமை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நேற்று அம்மாநில அரசில் அமைச்சர்களாக இருந்த அசாம் கணபரிஷத் கட்சியை சேர்ந்த அதுல் போரா, கேசவ் மஹந்தா, பானிபூஷன் சவுத்ரி ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியில்
இருந்து ராஜினாமா செய்தார்கள். முதலமைச்சரிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனால் முதலமைச்சர் கலக்கத்தில் உள்ளார்.