மீண்டும் சந்திரிகா…!! அதிர்ச்சியில் மஹிந்த-மைத்திரி!

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியொருவர் விரைவில் பதவி துறக்கவுள்ளார் என்று சிறிகொத்தாவ வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஐ.தே.க. தலைமைப்பீடத்தின் ஆலோசனையின் பிரகாரமே குறித்த எம்.பி. பதவி விலகுகிறார் என கூறப்படுகின்றது. சட்டம் மற்றும் அரசமைப்பு துறையில் இவர் தேர்ச்சிப்பெற்றவராவார்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மீண்டும் நாடாளுமன்றம் வருவதற்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இந்நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர்கள் சிலரே இதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவிடயத்தில் சு.க. எம்.பிக்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகின்றது.ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் எம்.பியாக நாடாளுமன்றம் வந்தாலும், சுதந்திரக்கட்சி எம்.பிக்களின் ஆசியுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சுயாதீனமாகவே செயற்படுவார்.

மஹிந்த, மைத்திரி கூட்டணிக்கு அரசியல் ரீதியில் மரண அடி கொடுப்பதற்காகவே ஐ.தே.கவால் இவ்வியூகம் வகுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. எனினும், இது குறித்து சந்திரிக்கா அம்மையாரின் நிலைப்பாடு என்னவென்பது இன்னும் வெளியாகவில்லை.