சுவையான செட்டிநாடு பிரியாணி சாப்பிட ஆசையா?!

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் கவர்ந்து இருக்கும் ஒரு உணவு பிரியாணி. இந்த பிரியாணியில் பல வகைகள் இருந்தாலும் அனைவரையும் மிகவும் கவர்வது சிலவகை பிரியாணிகளே. அதில் முக்கியமான ஒரு வகையான செட்டிநாடு பிரியாணி செய்முறையை காணலாம்.

பிரியாணி செய்யத் தேவையானப் பொருட்கள்:

பாஸ்மதி அரிசி – 1 கிலோ

வெள்ளாட்டுக் கறி – 1 கிலோ (கறி வாங்கும்போது கொழுப்புடன் எலும்பும் கறியும் சேர்ந்து இருப்பது போல் வாங்கவும், இது பிரியாணிக்கு நல்ல சுவையைக் கொடுக்கும்).

வெங்காயம் – 5௦௦ கிராம்

தக்காளி – 5௦௦ கிராம்

பச்சைமிளகாய் – 15

இஞ்சி – 150 கிராம்

பூண்டு – 150 கிராம்

புதினா – 1 கட்டு

தனி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

பட்டை – 1 பெரியதாக

பிரிஞ்சி இலை – 3

கிராம்பு – 5

ஏலம் – 5

அன்னாசிப்பூ – 3

மராட்டி மொக்கு 1

எண்ணெய் – தேவைக்கேற்ப (100 கிராம்)

நெய் – 3 மேஜை கரண்டி

தயிர் – 150 கிராம்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

1. முதலில் வெங்காயத்தை நீள வாக்கில் அறிந்து கொள்ளவும்.

2. தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

3. இஞ்சி, பூண்டு, 9 பச்சைமிளகாய், பாதி புதினாவை மிக்சியில் மைய அரைக்கவும்.

4. மீதி உள்ள பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும்.

5.இப்பொழுது குக்கர் அல்லது ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிரிஞ்சி இலை, பட்டை, ஏலம், கிராம்பு, அன்னாசிப்பூ, மராட்டி மொக்கு ஆகியவற்றை போட்டு நான்கு வதக்கவும். அது நன்கு பொரிந்ததும் அதில் வெங்காயத்தை போட்டு ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்கு கோல்டன் பிரவுன் வரும் வரை வதக்கவும். இப்பொழுது மீதி உள்ள பச்சைமிளகாய் சேர்க்கவும்.

6. பின்னர் இதில் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதற்கு 15 நிமிடம் வரை எடுக்கும்.

6. இதில் கழுவி வைத்துள்ள மட்டனைச் சேர்த்து நன்கு வதக்கும், மட்டன் வெள்ளை நிறத்தில் மாறும் போது இதில் தக்காளி சேர்த்து ஒரு ஸ்பூன் உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

7. தக்காளி பாதி வதங்கியவுடன் அதில் தயிர் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும்.

8. பின்னர் இதில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் விட்டு குக்கரை விசில் போட்டு 5 விசில் வைக்கவும். பாத்திரத்தில் வேக வைப்பவர்கள் கறி முக்கால் பாகம் வேகும் வரை வேக விடவும்.

9. இப்பொழுது அரிசியை அளந்து நன்கு கழுவி ஒன்றுக்கு ஒன்றை கப் அளவுக்கு தண்ணீர் விட்டு ஊற விடவும்.

10. கறியுடன் சேர்த்த நீரையும் அளவில் சேர்க்க வேண்டும்.

11. இப்பொழுது கறி நன்கு வெந்தவுடன் அதில் அரிசியில் இருக்கும் நீரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இப்பொழுது உப்பு, காரம் சரிபார்த்து தேவைப்பட்டால் அதற்கேற்ப சரி செய்யவும். (குக்கரில் செய்பவர்கள் இந்த நேரத்தில் குக்கரை விசில் போட்டு ஹையில் ஒரு விசிலும், லோ வில் 2 விசிலும் வைத்து அடுப்பை அனைத்து விட்டு 15 நிமிடம் கழித்து திறந்தாள் பிரியாணி ரெடி)

12. தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அரிசியை போட்டு ஒரு கொதி வந்ததும், அடுப்பை மீடியமில் வைத்து, நெய், மற்றும் புதினா தூவி நன்கு ஒரு முறை கிளறி, மிதமான சூட்டில் தம்மில் அரைமணி நேரம் வைத்து அடுப்பை அணைக்கவும்.

13.. பின்னர் 15 நிமிடம் கழித்து திறந்து பார்க்க சுவையான செட்டிநாடு மட்டன் பிரியாணி தயார்.