உன்னை சந்தோஷப்படுத்த இந்த உலகை விட்டு செல்கிறேன் அம்மா: 10 வயது சிறுமியின் உருக்கமான கடிதம்!

மெக்ஸிகோ நாட்டில் 10 வயது சிறுமி ஒருவர் தனது தாயை சந்தோஷப்படுத்த தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த சிறுமி எழுதி வைத்துள்ள கடிதத்தில், என்னால் எனது தாய் மிகுந்த துயரத்தோடு வாழ்ந்து வருகிறார்.

நான் பிறந்த காரணத்தில் எனது தந்தை என் அம்மாவை விட்டு பிரிந்துசென்றுவிட்டார். என்னை வளர்ப்பதற்காக எனது தாய் மிகவும் சிரமப்படுகிறார். அவரது வாழ்வில் மிகுந்த வலியை ஏற்படுத்திவிட்டேன், இதனால இந்த உலகத்தை விட்டு செல்கிறேன்.

அம்மா….நான் இறந்தபிறகு நீ மிகவும் சந்தோஷமாக வாழ வேண்டும், நன்றாக வேலை பார்க்க வேண்டும், இது எனது ஆசை என எழுதிவைத்துள்ளார்.

தனது மகளின் மரணத்தால் தாய் மிகுந்த துக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.