இதுதான் கோதுமையை விட மிகவும் ஆரோக்கியமான உணவு!

கோதுமை ஆரோக்கியமான உணவு என்றாலும் அதனைக் காட்டிலும் அரிசி அதிக சத்துக்களை கொண்டதாகும்.

கோதுமை

தற்போது விளைவிக்கப்படுகின்ற கோதுமை பெரும்பாலும் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாக இருப்பதால், அரிசி தான் இப்போதுள்ள கோதுமையை விட சிறந்த உணவு. ஏனெனில், மரபு மாற்றம் செய்யப்பட்ட கோதுமை பெரும்பாலும் க்ராஸ்பீராடாகத்தான் இருக்கிறது.

இதில் அதிகளவு குளுட்டான், அக்லூட்டின் மற்றும் லெக்டின் ஆகியவை இருக்கும். இவை உடலுக்கு தீங்கு விளைவிப்பவையே என்பதால் கோதுமையை குறைத்து அரிசியை உட்கொள்ளலாம்.

செரிமானம்

கோதுமையைக் காட்டிலும் அரிசி எளிதில் ஜீரணமாகக் கூடியது. ஏனென்றால் அரிசியில் குளுட்டன், லெக்டின் ஆகியவை அரிசியில் கிடையாது. எனவே உடல் எடை கூடாமல் இருக்க அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது.

மாவு அளவு

அரிசி உணவை மதியம் மட்டும் எடுத்துக் கொண்டு காலையும், இரவும் இட்லி மற்று தோசையை சாப்பிடுவதும் தவறானதாகும். இதனால் உடலில் கார்போஹைட்ரேட் அதிகரிக்கும். நாம் அன்றாடம் சாப்பிடுகிற உணவில் 30 முதல் 35 சதவிதத்திற்கும் மேல் தானிய உணவுகளோ, கார்போஹைட்ரேட்டோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொழுப்பு

அரிசி மற்றும் கோதுமை ஆகிய தானியங்கள் நிறைந்த உண்வை மட்டுமே அதிக அளவில் எடுத்துக் கொண்டால், உடலில் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் சேர்ந்து கொண்டே இருக்கும். இதனால் உடலில் கொழுப்பு சேர்ந்து விடும்.

எனவே, இவற்றுடன் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொண்டால் கொழுப்பு அதிகரிப்பது தடுக்கப்படும்.

உடல் ஆற்றல்

உடல் உழைப்பு குறைவாக இருக்கின்றவர்கள் அரிசி மற்றும் கோதுமை இரண்டையுமே குறைவாகவே சாப்பிட வேண்டும். அதற்கு பதிலாக பருவ கால காய்கறிகள் மற்றும் பழங்களை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவை தான் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும். ஏனெனில் காய்கறி, பழங்களில் அதிகப்படியான வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை கிடைக்கும்.

அலர்ஜி

கோதுமை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதற்கு காரணம் இந்தியாவில் பயிரிடப்படும் கோதுமை வகைகள் ஹெயர்லூமைச் சேர்ந்தவை. இதனால் இதில் உள்ள சத்துக்களின் வித்தியாசம் அலர்ஜியை ஏற்படுத்துகிறது.

கார்போஹைட்ரேட்

அரிசி, கோதுமை இரண்டிலுமே அதிக அளவிலான கிளைசெமிக் இண்டக்ஸ் இருக்கிறது. இரண்டுமே அதிகளவு கார்போஹைட்ரேட்டை கொடுக்கிறது என்றாலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

அரிசியில் கூடுதலாகவே உள்ள இந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உடலில் ஒரே மாதிரியான செயல்களை செய்கிறது. ஆனால், தொடர்ந்து அரிசி அல்லது கோதுமை இரண்டில் ஏதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இன்சுலின் சுரப்பில் நிறைய மாற்றங்கள் உண்டாகும்.