அனிஷாவை காதலிக்கும் விஷால்! அதிரடியாக கூறிய விஷால்!

செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமனாவர் நடிகர் விஷால். இதை தொடர்ந்து சண்டக்கோழி,துப்பறிவாளன், இரும்புத்திரை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பில் உள்ளார். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்து கொள்வதாக விஷால் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், விஷால் – வரலட்சுமி இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் நடந்த சண்டக்கோழி 2 படத்தின் விழாவில், நடிகர் விஷால் நண்பர் மட்டுமே என்று வரலட்சுமி விளக்கம் அளித்திருந்தார். விஷால் கூறும்போது, வரலட்சுமி எனது பால்ய நண்பர். என் மனதுக்கு நெருக்கமானவர், சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்தும் தெளிவுபடுத்துவேன் என்று கூறியிருந்தார்.

நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தை நெருக்கி உள்ளது. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஷாலுக்கு பெண்பார்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு, தற்போது மணமகளை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

மணப்பெண்ணின் பெயர், அனிஷா. ஆந்திராவை சேர்ந்தவர். விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெறயுள்ளது. இதற்காக விஷால், குடும்பத்தினருடன் ஐதராபாத் செல்கிறார். நிச்சயதார்த்தத்தில் திருமண தேதியை முடிவு செய்கிறார்கள். விஷாலுக்கு நிச்சயதார்த்தம் பெற்றிருப்பதை ஜி.கே.ரெட்டி பிரத்யேகமாக தெரிவித்தார்.

மணமகள் முடிவானதையும், ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடப்பதையும் அவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி பிரத்யேகமாக தெரிவித்தார்.

இந்நிலையில், திருமணம் பற்றி கூறியுள்ளார். அனிஷா ரெட்டிக்கும் திருமணம் என்ற தகவல் உண்மைதான். இது காதல் திருமணம். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறு. நாளை (வெள்ளிக்கிழமை) தான் எனது பெற்றோரும் அனிஷா பெற்றோரும் சந்தித்து பேசியிருக்கிறியோம். இதில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று நடிகர் விஷால் கூறினார்.