அதிகாலை சுற்றிவளைப்பு! வவுனியா இளைஞர்கள் யாழில் கைது!!

போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இரு இளைஞர்கள் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 20ஐ வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறை உத்தியோகத்தருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இளைஞர்கள் வசமாக சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.சாவகச்சேரி பொலிஸார், இளைஞர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.