வேட்டையாடி உணவு: சொத்துகளை விட்டுவிட்டு நாடோடி வாழ்க்கை!

தங்களுக்குள் 30 வயது வித்தியாசம் கொண்ட ஒரு முன்னாள் பேராசிரியரும் ஒலிம்பிக் வீராங்கனையும் தங்கள் சொத்துக்களை எல்லாம் விட்டு விட்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

12 ஆண்டுகளுக்குமுன் நெதர்லாந்தைச் சேர்ந்த Miriam (34) இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தபோது தன்னைப்போலவே உலகைச் சுற்ற விரும்பும் Peter (64)ஐச் சந்தித்தார்.

இயற்கையை விரும்பும் இருவரும் பிஸியான நகர வாழ்வை விட்டு விட்டு நாடோடிகள்போல் உலகைச் சுற்ற முடிவு செய்தனர்.

ஒரு புகழ் பெற்ற ஒலிம்பிக் இளம் வீராங்கனையாக சாதனை படைத்திருந்த Miriam, தனது 22ஆவது வயதில் தனது விளையாட்டை விட்டு விட்டு உலகைச் சுற்ற முடிவு செய்திருந்த நேரத்தில்தான் Peterஐச் சந்தித்தார்.

சுற்றுச்சூழலியலில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த Peter, தனது பேராசிரியர் வேலையை விட்டு விட்டு நாடோடி வாழ்க்கை வாழ முடிவு செய்திருந்தார். Peter சமையல் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள, Miriam வில் அம்பின் உதவியால் வேட்டையாடி உணவு சேகரிக்கிறார்.

Miriam முன்பு சுத்த சைவம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 40,000 பவுண்டுகள் மட்டுமே கையில் வைத்திருக்கும் இந்த ஜோடி, ஆண்டொன்றிற்கு 3000 பவுண்டுகள் செலவிடுகிறார்கள்.

பணம் செலவாகிவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால், ஏதாவது வேலையை தேடிக்கொள்வோம் என்கிறார்கள் இருவரும்.

ஏதேனும் நீரோடையைக் கண்டால் குளியல் போடும் இந்த ஜோடி, தலையைக் கழுவுவதற்கு ஷாம்புவிற்கு பதில் பயன்படுத்துவது தங்கள் சொந்த சிறுநீர்.