விரைந்து வந்த செய்தி! கடும் மகிழ்ச்சியில் யாழ்ப்பாண மக்கள்!

நீண்ட நாட்களாக புனரமைப்பு செய்யப்படாதிருந்த கச்சாய்-கொடிகாமம்-பருத்தித்துறை வீதி (AB 31)காப்பற் சாலையாக தரமுயர்த்தப்படவுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் மிக விரைவில் நடைபெறவுள்ளதுடன் MAGA நிறுவனத்தினரால் இந்தப் பணிகள் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இதன் ஆரம்பமாக நேற்றைய தினம் குறித்த வீதியில் சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

மிக நீண்ட நாட்களாகவே குறித்த வீதியினைப் புனரமைத்துத் தருமாறு மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேறுவதையிட்டு குறித்த விதியால் பயணிக்கும் மக்கள் தமது மகிழ்ச்சியினை வெளியிட்டுள்ளனர்.