வடமாநில இளம்பெண் செய்து வந்த செயல்!

சென்னையில் தங்கியிருந்த வடமாநில பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளரைக் பணத்துக்காக கடத்தி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நொளம்பூரில் செயல்படும் கொரேனு என்ற நிறுவனத்தில் ஒடிசாவைச் சேர்ந்த அமித்ராஜ் மேற்பார்வையாளராக உள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வில்லிவாக்கத்தில் கட்டுமான பணியை பார்வையிட சென்ற போது, 6 பேர் கும்பலால் காரில் கடத்தப்பட்டார்.

இது குறித்த விசாரணையின் போது, கடத்தப்பட்ட இடத்தில் சமையலராக இருந்த ஒடிசாவைச் சேர்ந்த ஜோஸ்னா என்ற இளம் பெண் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரது செல்போனை ஆராய்ந்த போது ஒடிசாவைச் சேர்ந்த திருலோட்சம் என்பவரிடம் வெகு நேரம் பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, இருவரது உரையாடல்களும் ஆராயப்பட்டன. அப்போது அமித்ராஜ் எங்கிருக்கிறார் என்ற தகவலை திருலோட்சம் என்ற நபரிடம் ஜோஸ்னா கூறுவது பதிவாகி இருந்தது அம்பலமாகியுள்ளது.

இதை அடுத்து திருலோட்சமின் செல்போன் சமிஞ்சைகள் கண்காணிக்கப்பட்டன.

இதற்கிடையில் கடத்தப்பட்ட அமித்ராஜின் வங்கி கணக்கில் இருந்து கடத்தல் கும்பல் ஏடிஎம் மூலம் பணம் எடுத்துள்ளனர்.

அந்த ஏடிஎம் மையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கொள்ளையர்கள் விவரங்களை சேகரித்தனர். அதே வேளையில் செல்போன் சமிஞ்சை வளசரவாக்கத்தைக் காட்டியதால், பொலிசார் அங்கு விரைந்து ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அமித்ராஜை மீட்டனர். அவரைக் கடத்திய ஜோஸ்னா, திருலோட்சம் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக அமித் ராஜ் எப்போதும் பணம் வைத்திருப்பார் என்பதால் அவரைக் கடத்தி பறிக்க முயன்றதாகவும், ஆனால் கடத்தப்பட்ட போது அவரிடம் பணம் இல்லாததால், அவரது ஏடிஎம் அட்டையை வைத்து 30 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துள்ளனர்.

ஏடிஎம் மூலமாக அமித்ராஜின் கணக்கில் இருந்து நாளொன்றுக்கு 20 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்பதால் ஒரு வாரமாவது வைத்திருந்து தவனை முறையில் ஏடிஎம் மூலம் பணம் பறிக்க திட்டமிட்டதாக கைதான கடத்தல் கும்பல் கூறியுள்ளனர்.