லிப்ட் கேட்ட நபர்! உதவி செய்தவருக்கு நேர்ந்த விபரீதம்.!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள குலாளர் தெருவில் வசித்து வருபவர் ஆண்டவர். 34 வயது விரைந்த அவர் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் நேற்று மாலை வேலைக்கு சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருக்கும்போது தாயமங்கலம் சாலையில் வழியை மறித்த நபர் ஒருவர் தன்னை நவத்தாவு என்ற இடத்தில் இறக்கி விடுமாறு உதவி கேட்டுள்ளார்.

மேலும் அவர்கள் நவத்தாவு பகுதிக்கு சென்றதும், அந்த இளைஞர் வண்டியை நிறுத்தி, கத்தியை வைத்து ஆண்டவரை மிரட்டியுள்ளார். மேலும் ஆண்டவரின் முகம் மற்றும் கைகளில் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். பின்னர் அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றுள்ளார்.

பின்னர் இதுகுறித்து போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டதை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருத்தி சென்ற அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.