மிக மோசமான முதல்வர்! கூகுளின் பதிலால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்!

பிரபல தேடுதளமான கூகுளில், இந்தியாவின் மோசமான முதல்வர் என தேடினால் கேரள முதல்வர் பினராயி விஜயனின் விக்கீப்பிடியா பக்கம் காட்டப்படுவது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் இணையதளமான கூகுளில் முட்டாள் என தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புகைப்படம் வந்தது.மேலும் டாப் 10 கிரிமினல்கள் என தேடினால் நரேந்திரமோடியின் புகைப்படம் வந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கூகுள் நிறுவனத்தின் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கூகுள் வளையத்தில் மிக மோசமான முதல்வர் என தேடினால் கேரள முதல்வர் பினராயி விஜயனின் விக்கீப்பிடியா பக்கம் காட்டப்படுகிறது.

சமீப காலமாக சபரிமலையில் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு கடும் கிளம்பி வந்த நிலையில், பெண்களை கோவிலுக்குள் செல்ல வைப்பதில் கேரள அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது.

இதனால் கேரளா மட்டுமின்றி, நாடு முழுவதிலும் பல பக்தர்களின் கண்டனத்திற்கு பினராயி விஜயன் உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் கூகுளின் இந்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.