ஆதார் கார்டில் தந்தையின் பெயரை கண்டு அதிர்ச்சியில் உறைந்த பெண்!

சென்னை மணலி கிராம தெருவில் வசித்து வருபவர் பார்த்திபன். 42 வயது நிறைந்த இவர் பாரிமுனையில் கப்பல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி விக்னேஸ்வரி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பார்த்திபன் அதேபகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளார். இதை அறிந்த விக்னேஸ்வரி, கள்ளக்காதலை கைவிடும்படி பல முறை கணவரிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத பார்த்திபன் அந்த பெண்ணுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, நேற்று பார்த்திபன் அணிந்திருந்த சட்டை பையியிலிருந்து கள்ளக்காதலியின் மகனது ஆதார் கார்டை புவனேஸ்வரி எடுத்துள்ளார். மேலும் அதில் தந்தை பெயரில் பார்த்திபன் என்று இருந்துள்ளது.

இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த விக்னேஸ்வரி, இதுகுறித்து கணவரிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். பின்னர் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விக்னேஸ்வரியின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து விக்னேஸ்வரியின் உறவினர்கள், பார்த்திபனை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.