3 மாதக் குழந்தையைக் கொடூரமாக கொன்ற இளைஞர்

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தன் குழந்தையின் தலையை நான்கு துண்டுகளாக வெட்டிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது கார்த்திகேயன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருக்கு ராஜேஸ்வரி என்பவருடன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 4 வருடங்களாக ராஜேஸ்வரி குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இதனிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தையின் முக ஜாடை தன்னைபோன்று இல்லை என்று மனைவியின் மீது சந்தேகப்பட்டு நேற்று இரவு ராஜேஸ்வரி நன்றாகத் தூங்கிய நேரம் பார்த்து 3 மாத கைக்குழந்தையின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார் கார்த்திகேயன்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 4 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாத நிலையில் மனைவி கருத்தரிக்கும் போதே கார்த்திகேயனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. குழந்தை பிறந்ததும் அது தன்னை போன்றே இல்லை. இது வேறு யாருக்கோ பிறந்தது என்று அவராகவே முடிவெடுத்து குழந்தையை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

கார்த்திகேயன் தன் மனைவி மீது சந்தேகப்படுவதற்கு முக்கிய காரணமே அவர் மீது அவரே நம்பிக்கை வைக்காதது தான் என கூறப்படுகிறது.

4 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருக்கவே அக்கம் பக்கத்தினர் கார்த்திகேயனுக்கு, குழந்தையே பிறக்காது என்று பேசுவதைக் கேட்டு, அதை நம்பத் தொடங்கியிருக்கிறார்.

அந்த மன உளைச்சல்தான் அவர் மனைவி மீது சந்தேகப்படுவதற்கு காரணம் என்கிறனர் பொலிஸ் தரப்பில்.