ரத்தவெள்ளத்தில் துடிதுடித்த பெண்! வாக்குமூலம் அளித்த கள்ளக்காதலன்!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் வசித்து வருபவர் செல்வி. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்துச் செய்து விட்டு தனியாக வசித்து வருகிறார்.

செல்விக்கு 14 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செல்வி ஜக்கப்பன் நகரில் உள்ள பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார்.

மேலும் அவருக்கு அதே பகுதியில் ஜவுளிக்கடையில் பணியாற்றும் தௌலத் என்பவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தௌலத் செல்விக்கு அடிக்கடி பணம் தந்து உதவி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று 4 மணி அளவில் செல்வி வேலை செய்யும் கடைக்கு சென்ற தௌலத் திடீரென செல்வியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்பொழுது கத்தியால் செல்வியை சரமாரியாக குத்தியுள்ளார்.ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய செல்வி கடைக்குள்ளேயே உயிரிழந்தார்.

இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தப்பி ஓடிய தௌலத் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், செல்வி செலவிற்காக இரண்டாயிரம் பணம் தேவைப்படுவதாக கேட்டு இருந்தார். அப்பொழுது பணம் கொடுப்பதற்காக செல்வி பணி புரியும் சென்றபோது செல்வி வேறு ஒரு ஆணுடன் செல்போனில் சிரித்து பேசிகொண்டு இருந்தார்.

இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் ஆத்திரமடைந்த நான் கடையில் இருந்த கத்தியை எடுத்து செல்வியின் கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினேன் என்று வாக்குமூலம் அளித்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.