தனக்கு பிறந்ததாக நினைத்து மூன்று மகன்களை வளர்த்த கோடீஸ்வரர்!

பிரித்தானியாவில் பல ஆண்டுகளாக வளர்த்த தன்னுடைய 3 பிள்ளைகளும் தனக்கு பிறக்கவில்லை என்பதை அறிந்த நபர் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

கோடீஸ்வர தொழிலதிபரான ரிச்சர்ட் மேசன் (55) என்பவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில், தம்பதிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

முதல் மகனுக்கு தற்போது 23 வயதாகும் நிலையில் இரட்டையர்களான மற்ற இரு மகன்களின் வயது 19 வயதாகும்.

இந்நிலையில் மேசனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்த போது cystic fibrosis என்ற நோய் இருப்பது தெரியவந்தது. அதாவது மேசன் ஆண்மையில்லாதவர் என தெரியவந்தது.

அப்போது தான் தனது மூன்று மகன்களும் தனக்கு பிறக்கவில்லை எனவும், தனது மனைவியின் ரகசிய காதலனுக்கு பிறந்தார்கள் என்பதையும் அவர் கண்டுப்பிடித்தார்.

அதாவது 1990களில் மேசனின் மனைவிக்கு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் அதன் காரணமாகவே அவருக்கு மூன்று பிள்ளைகளும் பிறந்துள்ளனர்.

இதையடுத்து மனைவியை நீதிமன்றம் மூலம் பிரிந்தார் மேசன். மேசனுக்கு £250,000 நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையில் தன்னை ஏமாற்றிய முன்னாள் மனைவி மீதி நீதிமன்றத்தில் மேசன் தனி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதோடு எம்மா என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ள மேசன் அவருடன் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.