அபிராமியை மிஞ்சிய கொடூரம்.! மாமனார் வைத்த மலையாள மாந்த்ரீகம்.!!

வேலூர் மாவட்டத்தை அடுத்துள்ள கணியம்பாடி அருகேயுள்ள நெல்வாய் கிராமத்தை சார்ந்தவர் தனசேகர். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ஜெயந்தி. ஜெயந்தியின் மாமனாரின் பெயர் கோபாலகிருஷ்ணன்.

தனசேகர் – ஜெயந்திக்கும் ஸ்ரீலட்சுமி மற்றும் மகாலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில்., ஜெயந்திக்கும் அவருடைய மாமனாரான கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தகாத பழக்கம் இருந்துள்ளது.

இதன் காரணமாக இவர்கள் இருவரும் அடிக்கடி தகாத பழக்கத்தை மேற்கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் ஜெயந்தி மற்றும் குழந்தைகளுடன் வேளாங்கண்ணிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு இல்லத்தில் அனுமதி கேட்டுள்ளனர்.

ஒன்றும் அறியாத ஜெயந்தியின் கணவர் வேளாங்கண்ணிக்கு சென்றுவர அனுமதி அளித்தவுடன்., கடந்த 27 ம் தேதியன்று ஜெயந்தி மற்றும் கோபாலகிருஷ்ணன் ஜெயந்தியின் குழந்தைகளை அழைத்து கொண்டு வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளனர்.

அங்குள்ள விடுதியில் அறையெடுத்து தங்கியிருந்த அவர்கள் நாட்களை கழித்துள்ளனர்., இந்நிலையில்., இருவரும் சென்று நீண்ட நாட்கள் ஆகியும் திரும்பியும் வரவில்லை., எந்த வித தொடர்பும் இல்லாததால் பதறிய ஜெயந்தியின் கணவர் மற்றும் உறவினர்கள் அச்சமடையவே காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில்., வேளாங்கண்ணியில் உள்ள விடுதியில் அறையெடுத்து தங்கிய இவர்கள் மகாலட்சுமியை தலையணையை அழுத்திவிட்டு கொலை செய்து பின்னர் அங்கிருந்து ஆந்திராவிற்கு சென்றுள்ளனர்.

ஆந்திரமாநிலத்தில் உள்ள விஜயவாடாவிற்கு சென்று ஜெயந்தி-கோபாலகிருஷ்ணன் மற்றும் ஜெயந்தியின் மகள் ஸ்ரீலட்சுமி மூவரும் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர் என்ற அதிர்ச்சி தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில்., தற்போது வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விசாரணையில்., ஜெயந்தியின் மூத்த மாமனாரான கோபாலகிருஷ்ணன் மலையாள மாந்தீராகவாதி என்றும்., தனது மாந்தீகத்தின் திறமையால் ஜெயந்தியை வசியம் செய்துள்ளார். மேலும்., தனசேகர் ஓட்டுநர் என்பதால் பணிக்கு சென்று விட்டு வாகனத்திலேயே படுத்து உறங்கும் வழக்கத்தை வைத்துள்ளார்.

அந்த சமயத்தில் உதவிகள் செய்வது போல் இல்லத்திற்கு சென்ற அவர் ஜெயந்தியை வசியம் செய்து தன்பால் ஈர்த்துள்ளார்., இவர்களின் தொடர்பானது அப்பகுதி வாசிகளுக்கு தெரிய துவங்கவே., சம்பவம் குறித்து கோபாலகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார்.

இதனைடுத்து கோபாலகிருஷ்ணின் திட்டப்படி ஜெயந்தியின் கணவர் தனசேகர் ஓட்டுநர் பணிக்கு சென்றவுடன் குழந்தைகளை அழைத்து கொண்டு வேளாங்கண்ணிக்கு சென்ற இவர்கள் அங்குள்ள விடுதியில் அறையெடுத்து தங்கியுள்ளனர்.

விடுதியில் அறை எடுத்த இவரின் அடையாளமாக தனது ஆதார் கார்ட் நகலை வழங்கியுள்ளார்., மேலும் ஜெயந்தியை தனது மகள் என்றும் ஜெயந்தியின் குழந்தைகள் தனது பேரகுழந்தைகள் என்று கூறி அறையெடுத்துள்ளார். அந்த சமயத்தில் இடையூறாக இருந்த குழந்தை மகாலட்சுமியை தலையணையை அமுக்கி கொலை செய்துவிட்டு., இங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து விடுதி அறையை விட்டு இவர்கள் இருவரும் மற்றொரு குழந்தையுடன் வெளியேறியுள்ளனர்.

பின்னர் ஆந்திராவில் உள்ள விஜயவாடாவிற்கு சென்று இவர்கள் இனிமேல் கண்டிப்பாக மாட்டிக்கொள்வோம் என்று நினைத்துவிட்டு இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர். மூன்று நாட்களாக குழந்தை தனலட்சுமியின் உடலானது விடுதி அறையிலே இருந்த நிலையில்., துர்நாற்றம் வீச தொடங்கியதை கண்ட விடுதி ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது., சிறுமியின் பிணத்தை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி., வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்., இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என்று அறிந்த தனசேகர் அங்குள்ள மக்களின் பேச்சுக்களை கவனித்து பின்னர் கோபாலகிருஷ்ணனின் கடைக்கு சென்று சோதிக்கையில் மாந்த்ரீகத்திற்கான அனைத்தும் பொருட்களும் கடையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் காவல் துறையினரின் விசாரணைக்கு பின்னர் இவர்களின் பிரேதங்களை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.