அம்பானி மகள் திருமணத்தில் ஜொலிஜொலித்த ஐஸ்வர்யா ராய்…

திருமண விழாவிற்கு வந்த நடிகை ஐஸ்வர்யா ராய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததால், திருமண நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைப்பதை நிறுத்த வேண்டும் என ரசிகர்கள் கிண்டலாக தெரிவித்துள்ளனர்.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக, நடிகை ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். அவர் அணிந்திருந்த சிவப்பு நிற டிசைனர் புடவை மிகவும் அழகாக தெரிந்ததால், பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அப்போது தனது கணவர் மற்றும் மகளுடன் இணைந்து அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைப்பதை நிறுத்த வேண்டும்.

ஏனென்றால், ஐஸ்வர்யா ராய் மிக அழகாக தெரிவதால் மணமகளை விட அதிகம் கவனம் ஈர்க்கிறார் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ஐஸ்வர்யா ராய் நடிகை தீபிகா படுகோனேவுடன் நெருக்கம் காட்டியதும், அவருடன் சேர்ந்து நடனமாடியதும் பார்வையாளர்களுக்கு புதிதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.