வலி தாங்க முடியாமல் முன்னாள் போராளி தற்கொலை – வசதியின்றி தவிக்கும் குடும்பத்தினர்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு களுதாவளை தெற்கு எல்லை வீதியில் வசித்து வந்த முன்னாள் போராளி வைரமுத்து திசவீரசிங்கம் தற்கொலை செய்துள்ளார்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான இவர் இரு வாரங்களுக்கு முன்னாள் தற்கொலைக்கு முயற்சித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், வைத்தியர்களால் கைவிடப்பட்ட நிலையில் தனது வீட்டில் இன்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, யுத்தத்தின் போது முன்னாள் போராளியின் உடம்பில் பாய்ந்த ஷெல் துகள் காரணமாக அடிக்கடி வலிப்பு நோய்கு உள்ளாவதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இதன்காரணமாக பெரும் அவஸ்தைப்பட்டுவந்த இவர் தற்கொலைக்கு முயற்சித்து உயிரிழந்துள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மிகவும் வறுமையில் உள்ள இக் குடும்பத்தினர் இறுதிக் கிரிகையை செய்வதற்கு கூட வசதியில்லாமல் தவிக்கின்றனர். உதவி செய்ய விரும்பும் நல் உள்ளங்களிடம் உதவுமாறு அவரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

மனைவியின் தொடர்பு இலக்கம் – 0755213209