போலி திருமணம் சான்றிதழ்: 24 பெண்கள் வெளிநாட்டில் கைது…

குடியுரிமைக்காக போலி திருமண சான்றிதழ் கொடுத்த 10 இந்தியர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து குடியுரிமை வேண்டி, அந்நாட்டை சேர்ந்த பெண்களை திருமணம் செய்துகொண்டதாக போலி திருமண சான்றிதழ் சமர்ப்பித்த 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 20 இந்தியர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

500-லிருந்து 5000 வரையிலான தாய் பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்துகொண்டதாக நடித்த, தாய்லாந்தை சேர்ந்த 24 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தலைமறைவாகியுள்ள 6 பெண்களை தீவிரமாக தேடி வருவதாக தாய்லாந்து பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தாய்லாந்தின் குடிவரவு பணியகத்தின் தலைமை அதிகாரி ஹக்பர்ன், வெளியிட்ட உத்தரவின் பேரிலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.