தனது மகளை காப்பாற்ற, இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த தாய்! அதிர்ச்சி சம்பவம்!

பிரிட்டன் நாட்டில் எசக்ஸ் கவுண்டியை சேர்ந்தவர் டிரேசி லார்கவுஸ்கி. 37 வயது நிறைந்த இவருக்கு 15 வயதில் ஷகிரா என்ற மகள் உள்ளார். டிரேசியும், ஷகீராவும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகேயுள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஷகிராவை கத்தியால் குத்த முயற்சித்துள்ளார். இதை பார்த்து பதறிப்போன டிரேசி மகளை காப்பாற்ற குறுக்கே புகுந்து அந்த நபரை தடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கத்தியால் டிரேசியின் மார்பகத்தின் மீதும், உடலின் பல இடங்களிலும் வேகமாக குத்தியுள்ளார். இதில் அவரின் நுரையீரல் சேதமடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து துடிதுடித்து உயிருக்கு போராடிய டிரேசியை அப்பகுதியில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நலத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து டிரேசியை கத்தியால் முதியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.