தினமும் 2 முட்டை சாப்பிட்டால்??

காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான உணவுப் பொருளை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதற்கு தினமும் இரண்டு முட்டை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

தினமும் 2 முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
  • முட்டையில் உள்ள புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்களுக்கு அதிக வலிமையை சேர்க்கிறது.
  • முட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், லூடின் மற்றும் சியாங்தின் போன்றவை கண் புரை போன்ற கண்கள் தொடர்பான நோய்களை தடுத்து கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • நம் அன்றாட உணவில் தினம் இரண்டு முட்டை எடுத்துக் கொள்வதன் மூலம் அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.
  • தினமும் 2 முட்டை சாப்பிடுவதால் கண் பார்வை அதிக கூர்மையாகவும், தெளிவாகவும் இருக்கும். மேலும், சூரிய கதிர்களில் இருந்து இவை நம்மை காக்கவும் செய்கிறது.
  • பெண்கள் தினமும் 2 முட்டை சாப்பிட்டு வந்தால் இவர்களுக்கு பெரிதும் வருகின்ற மார்பக புற்றுநோயிர்க்கான வாய்ப்பு 18% வரை குறைக்கப்படுகிறதாம்.
  • தினமும் 2 முட்டை சாப்பிட்டு வந்தால் முகத்தின் சுருக்கங்கள் மறைய தொடங்குமாம். அத்துடன் வயதாவை இது தள்ளி போடும்.
  • கெட்ட கொழுப்புகள் மூலம் நம் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் முட்டையில் உள்ள நல்ல கொழுப்புகள் எவ்விதமான உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தாது.
  • முட்டையில் உள்ள லுடெயின் மற்றும் செனாத்தின் கண்களில் காட்ராக்ட் போன்ற கண் குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் விட்டமின் ஏ ஆனது இரவில் ஏற்படும் பார்வை குறைபாட்டினை தவிர்க்க பயன்படுகிறது.
  • தினமும் காலை உணவில் முட்டையினை சேர்த்து கொள்வதால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.