டிக் டாக் செய்யும் போது நிஜமாகவே கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர்!

டிக் டாக் விளையாட்டின் போது, பாடலுக்கு ஏற்ப நடித்த இளைஞர் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஆஃப் டிக் டாக். இதில் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடித்து அதனை அப்லோட் செய்வது இன்றைய இளைஞர்களின் பொழுது போக்காக உள்ளது.

அந்த வகையில், டிக் டாக் விளையாடிய இளைஞர் ஒருவர், பாடல் ஒன்றுக்கு ஏற்ப நடித்துள்ளார். கையில் கத்தியை வைத்துக் கொண்டு நடித்துள்ள அந்த இளைஞர், தனது நடன அசைவுகளின் போது, எதிர்பாராத விதமாக தனது கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.

இந்த விபரீத வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.