வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தின் teaser வெளியானது!

செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது!

தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. இப்படம் அதிக வசூள் சாதனை படைத்தது மட்டும் அல்லாமல், நான்கு விருதுகளையும் தட்டி சென்றது. இத்திரைப்படம் கன்னடம் மற்றும் இந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழிலும் உருவாகி வருகிறது. ரீமேக் உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படத்தினை இயக்குநர் சுந்தர்.சி இயக்க, சிம்பு நாயகனாக நடிக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கின்ன்றார். இவர்களுடன் கேத்ரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மஹத் ராகவேந்திரா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கின்றார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படம் பொங்கல் திருநாளன்று வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பெங்களுக்கு அஜித்-ன் விஸ்வாசம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அஜித்-ன் தீவிர ரசிகரான சிம்புவின் திரைப்படமும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.