செவ்வாய் கிரகத்தில் பளபளவென மின்னியபடியே கொட்டிக்கிடக்கும் மர்ம கற்கள்?

செவ்வாய் கிரகத்தில் தங்க நிறத்திலான கற்களை கண்டறிந்திருப்பதாக விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ள ரோவர்ஸ் ஆய்வு இயந்திரம், தங்க நிறத்திலான கற்களினை கண்டறிந்துள்ளது.

இதுபற்றி கூறியுள்ள நாசா ஆராய்ச்சியளர்கள், தங்க நிறத்திலான அந்த மர்ம பொருள் எங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அது என்னவென்பது இதுவரை அறியப்படாத நிலையில், எங்களுக்குள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த கற்களுக்கு “லிட்டில் கொல்சன்” என பெயரிட்டுள்ளோம்.

அந்த மர்மமான பொருளை பற்றிய புதிரை தீர்க்க வேண்டுமெனில், அதன் ரசாயன கலவை ஆய்வு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த ரோவர்ஸ் இயந்திரத்தில், லேசர் உணர்திறன் கொண்ட காமிரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் வேதியியல் தூண்டலை நிகழ்த்தி மர்ம பொருளை பற்றிய ரகசியத்தை கண்டறிய உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த கல் பளபளப்பாக இருப்பதால், விண்கல்லாக இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அனுப்பியுள்ள ரோவர்ஸ் இயந்திரமானது, தோராயமாக ஒரு காரின் அளவை கொண்டது. இதில் 7 அடி நீளத்திற்கு கை போன்ற உருவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இணைப்பு, பாறைகளை “ஆவியாக்கும்” ஒரு லேசர் மற்றும் 17 காமிராக்கள் உள்ளிட்ட 10 விஞ்ஞான சாதனங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.