அலெக்சா சேவையில் ஸ்கைப் வசதி…

அமேசான் நிறுவனத்தின் குரல் வழி உதவியாளர் சேவையான அலெக்சாவுடன் மைக்ரோசாப்டின் ஸ்கைப் சேவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமேசானின் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் சாதனங்கள் வாயிலாக ஸ்கைப் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ஸ்கைப் ஆடியோ, வீடியோ அழைப்புகள் தவிர மொபைல், லேண்ட்லைன் போன்களுக்கும் பேச முடியும். அலெக்ஸா பயனாளிகள் செட்டிங்ஸ் பகுதியில் சென்று இந்த வசதியை ஒருங்கிணைத்து இயக்கிக்கொள்ளலாம்.

அலெக்ஸா குரல் வழி உதவியாளர் சேவையில் பிரத்யேக வசதிகளை உருவாக்கிக்கொள்வதற்காக ஸ்கில் புளுபிரிண்ட் வசதியையும் அமேசான் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.