இரவில் சரியாக தூக்கம் வரவில்லையா? காரணம்?

ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் இன்றிமையாத ஒன்றாகும். மேலும் இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் இரவில் தூக்கமே வராமல் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

அதற்கு என்ன காரணம் மற்றும் அதனை போக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

தூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்கள்
  • நீண்ட பயணம், புது இடம், பழகாத சூழல் போன்றவற்றால் தூக்கம் வராது. இவ்வகையான பிரச்சனை சில நாட்களில் சரியாகிவிடும்.
  • அலுவலக பிரச்சனைகள்,நண்பர்கள் மற்றும் உறவுகளிடத்தில் ஏற்படும் சங்கடங்கள் போன்றவற்றால் தூக்கம் ஏற்படாது.
  • சிலருக்கு பகலில் நன்றாக தூக்கம் வரும். ஆனால் இரவு படுக்கைக்கு சென்றவுடன் உற்சாகமாக எழுந்து உட்கார்ந்து கொள்வர். இரவில் தூக்கம் வரவில்லை என்று மொபைல் போன் எடுத்து பார்ப்பது, டிவி பார்ப்பது போன்ற வேலைகளில் ஈடுபடக்கூடாது. அவற்றிலிருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சத்தால் தொடர்ந்து நமக்கு தூக்கம் வராது.
  • உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்து இல்லையென்றாலும் தூக்கம் வராது என்பதால் தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும்.
  • மருத்துவ காரணங்களை விடுத்து சிலருக்கு காரணமே இல்லாமல் தூக்கம் வரவில்லையென்றால் அதை உடனடியாக கண்காணித்து பிரச்சனையை தீர்ப்பது மிக அவசியம்.
நிம்மதியாக தூங்க தினமும் இதை செய்யுங்கள்
  • வாழைப்பழம் இயற்கையாகவே இரவில் சிறந்த தூக்கத்தை தரக் கூடியது. முதியோர்கள் அதிக இரத்த அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிக்கும் போது வாழைப்பழங்களை சாப்பிட்டால் எளிதில் தூக்கம் வரும்.
  • தண்ணீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து, அதோடு கொஞ்சம் தேன் கலந்து இரவில் குடித்துவர தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
  • தூக்கமின்மை பிரச்சனை தீர தயிர் ஒரு நல்ல தீர்வாக உள்ளது. தினமும் உணவுடன் தயிரை உட்கொண்டு வந்தால் இரவில் உறக்கம் நன்றாக வரும்.
  • வெங்காயத்தின் தோலை உரித்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அளவாக தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டி, வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.
  • வேப்பிலை இயற்கையாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. வேப்பிலையை எடுத்து மிதமான சூட்டில் நன்கு வறுத்து அதை தலையில் வைத்து உறங்கினால் நன்றாக தூக்கம் வரும்.
  • நல்ல உடற்பயிற்சி ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும். ஆனால் மிக அதே உடற்பயிற்சியை அதிக நேரம் எடுத்துக் கொண்டால் அதுவே தூக்கமின்மைக்கு காரணமாகிவிடும். உடற்பயிற்சிகளை மாலைக்குள் முடித்துவிடுவது நன்று.