உங்களுக்கு இந்தந்த பிரச்னைகளெல்லாம் இருக்குதா? உடனே பைரவரை வணங்குங்கள்..!!

நமது வாழ்க்கையில் இன்பங்கள் ஏற்பட்டாலும்., துன்பங்கள் ஏற்பட்டாலும் அதற்கு அழைப்பது நம்மை படைத்த கடவுளை மட்டுமே., தினமும் கடவுளை வணங்குவதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அந்த வகையில் பைரவர் சாமியை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்.

ஞாயிற்றுக்கிழமை:

ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் ருத்ராபிஷேகத்தின் போது பைரவரை வடை மாலையுடன் வழிபட்டால் திருமணப்பேறு எளிதில் கிடைக்கும். இதன் மூலம் திருமணம் ஆகாதவர்கள் மற்றும் திருமண தடை உள்ளவர்கள் பயன் பெறலாம்.

திங்கள்கிழமை:

திங்கள்கிழமையன்று பைரவருக்கு வில்வார்ச்சனை செய்யும் போது சிவபெருமானின் அருள் கிடைக்கும்.

செவ்வாய்கிழமை:

செவ்வாய்க்கிழமையன்று., மிளகுடன் சேர்த்து மாலையில் தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் இழந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

புதன்கிழமை:

புதன்கிழமையன்று நெய் தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டு வர பூமி இலாபம் கிடைக்கும்.

வியாழக்கிழமை:

வியாழக்கிழமையன்று பைரவருக்கு விளக்கேற்றி வழிபட்டு வந்தால் ஏவல்., பில்லி மற்றும் சூனியத்தின் பாதிப்புகள் குறைந்து அதில் இருந்து விலக்கம் ஏற்படும்.

வெள்ளிக்கிழமை:

வெள்ளிக்கிழமையன்று பைரவருக்கு வில்வ அர்ச்சனை மாலை நேரத்தில் செய்துவந்தால் செல்வங்கள் செழித்து குடும்பத்தில் வளர்ச்சி அதிகரிக்கும்.

சனிக்கிழமை:

சனிக்கிழமை: சனி பகவானுக்கு குரு பைரவர், ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகும்.