இந்திய அணி இப்போ ஜெயிக்கலைனா,. இந்த ஜென்மத்துல முடியாது – ஆஸ்திரேலியா முன்னாள் அதிரடி கருத்து!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில், கடந்த 21 ஆம் தேதி முதல் டி20 தொடர் தொடங்கியது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை முடிந்தது.

இந்நிலையில், டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்த டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் அவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றவில்லை என்றால் இனி எப்போதும் தொடரை வெல்ல முடியாது என கூறியுள்ளார். தற்போது இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியை விட எட்டாத உயரத்தில் உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி 2-0 அல்லது 3-௦ என்ற கணக்கில் தொடரை வெல்லும் என நினைக்கிறன் என்றும், ஆஸ்திரேலிய அணியால் இந்த தொடரை ‘டிரா’ கூட செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.