எல்லாம் முடிஞ்சு போச்சு.. 2019 உலக கோப்பை கிரிக்கெட் பீதி!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் செயப்படுவதற்கு முன்னரே நடந்த சில நிகழ்வுகள் ஐ.சி.சி-க்கு இன்ப அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

உலக கோப்பை தொடருக்கான ஆயத்த பணிகள் நடந்து வருவது குறித்து பேட்டியளித்துள்ள ஐ.சி.சி விளம்பரப் பிரிவு மேலாளர்,

இங்கிலாந்தில் 2019 மே மாதம் 30 ஆம் தேதி முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்கவுள்ளன. இதில் மொத்தமாக 48 போட்டிகள் நடைபெறவுள்ளன.

போட்டி தொடங்க இன்னும் ஆறு மாத காலத்திற்கும் மேலாக இருக்கும் நிலையில், டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இப்போதைக்கு கைவசம் ஒரு 3,500 டிக்கெட்டுகள் மட்டும் தான் உள்ளது. இதிலும் இந்தியா ஆடும் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

இதனை வைத்து பார்க்கும் பொழுது உலகக் கோப்பை போட்டிகள் மீது மற்ற ஆண்டுகளைவிட இந்தமுறை ரசிகர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தும் தொன்னாப்பிரிக்க அணியும் மே 30 ஆம் தேதி ஓவல் மைதானத்தில் எதிர்கொள்கின்றன.

இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் முதல் போட்டி ஓல்டு ட்ராஃபொர்டில் ஜூன் 16 ஆம் தேதி நடக்கிறது. இறுதிப்போட்டி ஜூலை 14-ல் லார்ட்ஸில் நடக்கவுள்ளது’ என்று கூறியுள்ளார்.