அடுத்த 20 ஆண்டுக்கு இவர்தான்! சேவாக் அதிரடி கருத்து!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில், கடந்த 21 ஆம் தேதி முதல் டி20 தொடர் தொடங்கியது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து, நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை முடிந்தது.

இந்நிலையில், டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த டெஸ்டில் துவக்க வீரர்களை களமிறக்குவது குறித்து சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், நான் இப்போது இந்திய அணியின் கேப்டனாக இருப்பேன் என்றால் துவக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் பிரித்வீ ஷா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்றும், முரளி விஜய்க்கு போதுமான அளவு வாய்ப்பு வழங்கப்பட்டதால், அவர் இப்போது வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய நேரம் இது. அடுத்த 20 ஆண்டுக்கு பிரித்வீ ஷாதான் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக இருப்பர் என்று கூறியுள்ளார்.